Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் வன்முறை கும்பலில் அட்டகாசம்; பல பொருட்கள் சேதம்

யாழில் வன்முறை கும்பலில் அட்டகாசம்; பல பொருட்கள் சேதம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறை கும்பலை சேர்ந்த நால்வரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, அவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்கள் என்பவற்றையும் மீட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவது,

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

அங்கிருந்து தப்பி சென்ற கும்பல் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.

அதில் ஒரு வீடு தீ பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவையும் தீக்கிரையாகியுள்ளது.

அதனை தொடர்ந்து மீசாலை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த குறித்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டினை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

அங்கிருந்து மற்றுமொரு வீடொன்றில் புகுந்த கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட சில மணி நேரத்தினுள் தமது ஊருக்குள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு தீ வைத்ததை அறிந்து ஊரவர்கள் ஒன்றிணைந்து வன்முறை கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை பலர் தப்பி சென்ற நிலையில் நால்வர் மடக்கி பிடிக்கப்பட்டனர்

வன்முறை கும்பல் தப்பி செல்லும் போது விட்டு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள் , இரண்டு வாள்கள் மற்றும் கொட்டான்கள் என்பவற்றையும் மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாரிடம் தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நால்வரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் வாள்கள் , கொட்டான்கள் என்பவற்றையும் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
Next Post
எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.