Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்கள் சரியான தலைமைத்துவத்தை ஆதரிக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஷ்

தமிழ் மக்கள் சரியான தலைமைத்துவத்தை ஆதரிக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஷ்

6 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைத்தீவு பூகோள ஆதிக்கத்தில் சிக்குண்டு இருப்பதனால் வருகின்ற வல்லரசுகளாலும் இந்த நாட்டை ஆளுகின்ற அரசுகளாலும் இன்று வரையும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக தமிழர்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுமுகமாக எந்த தலைமைத்துவம் முன்நிற்கின்றதே அந்த தலைமைத்துவத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தெரிவித்தார்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதம் இன்று வியாழக்கிழமை (19) ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தீவில் சிங்களவர்களால் தமிழர்களை அடக்கி ஒடுக்கப்படுக்குறவேளை தமிழர்கள் தாயக நிலப்பரப்பில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அப்போது பல போராட்ட இயக்கங்கள் மற்றும் அமைப்புக்கள் குரல் கொடுத்து இந்திய அரசுக்கு எடுத்து கூறினர்.

அப்போது இலங்கையில் ஒரு அமைதியை நிலை நாட்டுவதற்காக இந்திய வல்லரசு ஐபிகே என்ற இராணுவத்தை அனுப்பி சமாதானத்தை நிலைநாட்டுவதாக வந்து, எங்களது மக்களை அவர்கள் வந்த நோக்கத்துக்கு எதிர்மாறாக தமிழர்களை அடக்கி ஒடுக்கி செயற்பட்டனர்.

அந்த காலப்பகுதியில் தமிழர்களுக்காக உறுதியாக நின்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து. அதன்போது புலிகளுக்கும் இந்திய வல்லரசுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு ஒரு ஆயுத போராட்டம் இடம்பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கில் இருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்து துன்புறுத்தி கற்பழித்து படுகொலை செய்தனர்.

எனவே அந்த நிலைப்பாட்டை நிறுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட போராட்டங்கள் தமிழ் தாயகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மட்டு அம்பாறை அன்னையர் முன்னணி தலைவராக இருந்த அன்னை பூபதி 2 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிர போராட்டம் 1988 மார்ச் 19ம் திகதி ஆரம்பித்து, 32 நாட்கள் உண்ணாவிரதமிருந்து இருந்து தன்னுடைய உயிரை தியாகம் செய்தார்.

இவ்வாறு உயிர் தியாகம் செய்து தாயகத்தில் இளைஞர்கள் யுவதிகள் அடிமனதில் போராட வேண்டிய உறுதி தன்மையை ஏற்படுத்தியிருந்த அவர், தமிழ் தேசத்தினுடைய தாயாக இருந்து மக்களின் இருப்புக்காக செயற்பட்டு, பேசும் பொருளாக இருந்து உலக அளவில் தமிழ் மக்களுக்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என தியாகதீபம் திலீபனை தொடர்ந்து அன்னை பூபதியின் தியாகங்களை தொடர்ந்து இந்த மண்ணிலே பல போராட்டங்கள் வெடித்து, பெயர் சொல்லுமளவிற்கு இன்று இந்த இலங்கை தீவில் எங்கள் இனம் வாழுகின்றது.

ஆகவே இந்த போராட்டங்கள் எவ்வாறு இருந்தாலும் இந்தபூகோள ஆதிக்கத்தில் இந்த இலங்கை தீவு சிக்குண்டு இருப்பதனால் வருகின்ற வல்லரசுகளாலும் இந்த நாட்டை ஆளுகின்ற அரசுகளாலும் தொடர்ச்சியாக கையாளப்பட்டு இதுவரைக்கும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக தமிழர்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இன்று தமிழ் மக்கள் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். பூகோள ஆதிக்க போட்டி என்பது உச்சகட்ட நிலையை அடைந்திருக்கின்றது

எனவே வருகின்ற சந்தர்பங்களை சரியான விதத்திலே தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் அதற்கு சரியான அரசியல் தலைமைத்துவம் சரியான முறையில் செயற்பட்டால் மட்டும் தான் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்ற முடியும்.

அந்த அடிப்படையில் எங்களது போராட்டம் என்பது எவ்வாறான பூகோள ஆதிக்க போட்டிகள் இருந்தாலும் தமிழ் மக்களுடைய தேசம் சுயநிர்ணய உரிமை, இறைமையின், அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்று முகமாக எந்த தலைமைத்துவம் முன்நிற்கின்றது. அந்த தலைமைத்துவத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் அதன் மூலம் தான் இப்படிப்பட்ட தியாகங்களுக்கு பரிகாரமாகும் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன

மஹிந்தவுக்கு 60 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக சிஐடியில் ஒப்புக்கொண்டு நீதிமன்றில் மறுத்த கபில சந்திரசேன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.