Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!

3 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஒரே நாளில் சுமார் 6க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன், வளைகுடா நாடுகளை நேரடியாக போருக்கு இழுக்கும் அபாயமும் உருவானது.

உலக மசகு எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஏற்கெனவே முடக்கியுள்ள ஈரான், வளைகுடா நாடுகளின் எரிசக்தி உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்ததால், உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க, சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியைச் செங்கடல் வழியாக மாற்றியிருந்தது.

ஆனால், செங்கடல் துறைமுக நகரமான யான்புவில் உள்ள சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையமும் ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானது.

இதன் சேத விவரங்களை சவுதி பாதுகாப்பு அமைச்சகமும் ஷெல்; நிறுவனமும் ஆய்வு செய்து வருகின்றன.

ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கி வந்த 6 ட்ரோன்களை சவூதி அரேபியா இடைமறித்து அழித்தது.

கட்டாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு நிலையமான ராஸ் லஃப்பான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சேதத்தினால் எரிவாயு விநியோகம் சீராக சில ஆண்டுகளாகும் என அஞ்சப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
செய்திகள்

காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

March 20, 2026
உக்ரைனுக்கு ரூ.9 ஆயிரம் கோடி இராணுவ உதவிகளை வழங்கும் ஸ்பெயின்!
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ரூ.9 ஆயிரம் கோடி இராணுவ உதவிகளை வழங்கும் ஸ்பெயின்!

March 20, 2026
ஹம்பாந்தோட்டையில் 500 லீற்றர் எரிபொருள் மீட்பு; ஒருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டையில் 500 லீற்றர் எரிபொருள் மீட்பு; ஒருவர் கைது!

March 20, 2026
ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600க்கும் மேற்பட்ட மதனமோதக பொதிகள் பறிமுதல்!
செய்திகள்

ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600க்கும் மேற்பட்ட மதனமோதக பொதிகள் பறிமுதல்!

March 20, 2026
களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்
காணொளிகள்

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்

March 20, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு

March 20, 2026
Next Post
யாழில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்பு

யாழில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு