Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹார்முஸ் ஜலசந்தியை நாளைக்குள் திறக்கவேண்டும்- ஈரானுக்கு காலக்கெடு விதித்த அமேரிக்கா; அதிகரிக்கும் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியை நாளைக்குள் திறக்கவேண்டும்- ஈரானுக்கு காலக்கெடு விதித்த அமேரிக்கா; அதிகரிக்கும் பதற்றம்

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை (24) காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கின. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பல கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 8,000 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின.

கடந்த 23 நாட்களாக நடைபெற்று வரும் போரில், ஈரானின் இராணுவ தளங்கள், எண்ணெய் வயல்கள், அணுசக்தி மையங்கள், ஏவுகணை தளங்கள் ஆகியவை கடுமையாக சேதம் அடைந்தன. ஈரானின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆனாலும், ஈரான் அரசு அமெரிக்காவிடம் சரண் அடையாமல், தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை, எந்த அச்சுறுத்தலுமின்றி முழுமையாக ஈரான் திறந்து விட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்றிலிருந்து 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுகுறித்து, தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று வெளியிட்ட தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, நாளை காலைக்குள் ஈரான் முழுமையாகத் திறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஈரானின் பல்வேறு மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும். மிகப்பெரிய மின் நிலையத்தின் மீதே முதலில் தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
நேபாளத்திலிருந்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் இளைஞன் இந்தியாவில் கைது

நேபாளத்திலிருந்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் இளைஞன் இந்தியாவில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு