Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீறப்படும் ஃபெடரல் சட்டம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

மீறப்படும் ஃபெடரல் சட்டம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் 250-ஆம் ஆண்டு விடுதலை நாள் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வெளியிடப்பட உள்ள தங்க நாணயத்தில் டொனால்ட் டிரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உயிருடன் உள்ள அதிபர் படம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருக்கக்கூடாது என்று அமெரிக்க ஃபெடரல் சட்டங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கடந்த 1926-இல் அமெரிக்காவின் 30-ஆவது அதிபரான கால்வின் கூலிட்ஜ் தம் படம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை அமெரிக்கா விடுதலை அடைந்ததன் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வெளியிட்டிருந்தார்.

அந்த நாணயங்களில் மறைந்த அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அருகில் கால்வின் இருப்பது போல் சித்திரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க கவின் கலை ஆணையம் 24 கரட் தங்க நாணயத்தில் கைகளைக் குவித்தபடி மேஜையில் சாய்ந்த கோணத்தில் ட்ரம்ப் இருக்கும் உருவத்தைப் பொறிக்க ஒப்புதல் அளித்துள்ளதாம். எனினும், அந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்படாது என்று அமெரிக்க கருவூலர் பிராண்டன் பீச் தெரிவித்தார்.

இந்த நிலையில், ட்ரம்ப்பின் முயற்சி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தேசமாண்புகளுக்கு எதிரானதாக இந்த நடவடிக்கை இருப்பதாக ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது.

அவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே தங்கள் முகங்களை நாணயங்களில் பொறித்துக்கொள்வர். ஒருபோதும் ஜனநாயக தலைவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் தன் தடத்தைப் பதிவு செய்ய ட்ரம்ப்பின் மற்றொரு முயற்சியாக மேற்கண்ட நடவடிக்கை அமையவுள்ளது என்ற விமர்சனப் பார்வையும் டிரம்ப் மீது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
“ஈரான் கோருவதற்கு முன்பே உதவிய இலங்கை”; போர்க்கப்பல் தாக்குதல் குறித்து ஈரான் தூதுவர் நெகிழ்ச்சி!

"ஈரான் கோருவதற்கு முன்பே உதவிய இலங்கை"; போர்க்கப்பல் தாக்குதல் குறித்து ஈரான் தூதுவர் நெகிழ்ச்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு