Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

4 months ago
in செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி, கணேமுல்ல பொலிஸ் பிரிவில் 4 கிலோ 423 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,450 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் உதவி செய்துள்ளமையும், அவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தமையும் விசாரணைகளில் அம்பலமானது.

சந்தேநபர்கள் இருவரும் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்தபோது, கடந்த 24ஆம் திகதி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நேற்று (28) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 23 மற்றும் 57 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி
செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

July 29, 2026
கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 29, 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
Next Post
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் தீவிரம்!

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு