Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடும் வெப்பம்; பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!

கடும் வெப்பம்; பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!

6 months ago
in செய்திகள்

வறட்சியான வானிலைக்கு மத்தியில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

01.வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாதுப்புகள் வெளியேறுவதால் ஏற்படும்.

தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும்.

முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்).

  1. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம்.

முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல்.

  1. வெப்பத்தாக்கம் (Heat Stroke) உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல்.

முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்துக்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990ஐ அழைத்து சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும்.

அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற/விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பாடசாலை இடைவேளையின் போது கடும் வெயில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலதிகமாக நீர் அருந்துவதற்கும் களைப்பைத் தீர்ப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது. நண்பகல் வேளையில் அதிக வெப்பநிலை நிலவும் போது அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (பாடசாலையிலும் வீட்டிலும்).

பிராந்திய ரீதியில் நிலவும் வெப்பநிலை/வானிலை நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிடுவது சிறந்தது.

வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

தேவையான அளவு குடிநீரை வழங்குவதோடு, சுத்தமான நீரை அதிகளவு பருகுவதற்கு மாணவர்களைத் தூண்டுதல்.

பாடசாலையில் போதுமான நீர் வசதி இல்லையெனில் அதற்கு மாற்று வழிகளைக் கையாளுதல் (மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்டச் செயலாளரின் உதவியைப் பெறலாம்).

வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தல். மின்விசிறிகளைப் பயன்படுத்தினால் சுத்தமான காற்று கிடைக்க கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்.மாடிக்கட்டிடங்கள் அல்லது தகரக் கூரையிடப்பட்ட அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுதல்.

மாணவர்களின் தனிப்பட்ட தயார்நிலை

அவசியமான சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி (Tie) அணிவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் முடிச்சைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். அரைக்கச்சை (Belt) அணிவதைக் கூடியவரை குறைத்தல்.

அதிக வெயில் நிலவும் போது தலைக்கவசம் அல்லது குடையைப் பயன்படுத்துதல். அடர் நிற ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான, மெல்லிய நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிதல் (பாடசாலைக்கு பின்னரான செயற்பாடுகளுக்கும் இது பொருந்தும்).

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லுதல். சாதாரண நாட்களை விட அதிகளவு நீர் அருந்துதல். நீருக்குப் பதிலாக இளநீர் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது. எக்காரணம் கொண்டும் அதிக சீனி கொண்ட மென்பானங்களை அருந்தக் கூடாது.

தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். அதிக வெப்பம் உணரப்படும்போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல்.

அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை உயர்வு; பிரெயிட் ரைஸ், கொத்து விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை உயர்வு; பிரெயிட் ரைஸ், கொத்து விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.