Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் பொலிஸ் அதிகாரி படுகொலை; உதவியாளர் உட்பட இருவர் கைது!

யாழில் பொலிஸ் அதிகாரி படுகொலை; உதவியாளர் உட்பட இருவர் கைது!

4 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர்.

பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.

உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்றுமுன்தினம்(29) கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றையதினம் திங்கட்கிழமை குறித்த இளைஞனை பாலாவி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவ தினத்தன்று, உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் தொடர்ந்தும் தேடுதல் நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை இன்று வெளிப்படுத்த இருக்கிறார் கம்மன்பில!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை இன்று வெளிப்படுத்த இருக்கிறார் கம்மன்பில!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு