Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழகம் தெரிவான செங்கலடி மத்திய கல்லூரி 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

பல்கலைக்கழகம் தெரிவான செங்கலடி மத்திய கல்லூரி 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு இன்று (06) காலை மிக விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை செங்கலடி சந்தி பிரதான வீதியில் ஆரம்பமான இந்த வரவேற்பு ஊர்வலம், அப்பகுதியையே விழாக்கோலம் பூணச் செய்தது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 45 மாணவர்களும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிதிகள் சூழ பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை முழங்க மாணவர்கள் பேரணியாக பாடசாலைக்கு அழைத்ச் செல்லப்பட்டனர்.

தமது பிள்ளைகளின் இந்த உன்னத வெற்றியைக் கண்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் அதிபர் திரு. க.சுவர்ணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்குடா கல்வி வலையப் பணிப்பாளர் திரு. ரீ.அனந்ரூபன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலையப் பிரதிப்பணிப்பாளர்கள் , வலையக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாதனை மாணவர்களை வாழ்த்தினர்.

இம்முறை வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, செங்கலடி மத்திய கல்லூரி அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழிநுட்பவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலிருந்தும் மொத்தமாக 45 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளமை பாடசாலைக்கும், அப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இந்த வெற்றியானது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என இதன்போது உரையாற்றிய கல்குடா கல்வி வலையப் பணிப்பாளர் திரு. ரீ.அனந்ரூபன் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் நிகழ்வில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் தங்களது அனுபவங்களை சபை மத்தியில் மகிழ்ச்சியுடன் உருக்கமாக பகிர்ந்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி
செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முஸ்லிம் காங்கிரஸிடம் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
Next Post
ஈரான் பாதுகாப்பு படையின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்!

ஈரான் பாதுகாப்பு படையின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு