Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பார்வை தடையல்ல! பாக் நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்த பார்வையற்ற மாணவி!

பார்வை தடையல்ல! பாக் நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்த பார்வையற்ற மாணவி!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் மகள் ஈஸ்வரி (17) 11ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் நீந்துவதற்கு பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக் நீரிணை கடலை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து 11 மணி , 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார்.

மேலும், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் என்பவர் கடந்த 05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்தி கடந்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
Next Post
ஐக்கிய தேசியக் கட்சியே எனது பூர்வீக இல்லம்; எஸ்.எம். மரிக்கார்

ஐக்கிய தேசியக் கட்சியே எனது பூர்வீக இல்லம்; எஸ்.எம். மரிக்கார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு