Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு – கிழக்கு காணிகளை விடுவிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

வடக்கு – கிழக்கு காணிகளை விடுவிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று(08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எஞ்சிய காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போது எழுந்துள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக தற்போதுள்ள காணிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கண்டறியுமாறு அவர் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்புப் படையினரின் நலன்புரித் திட்டங்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆலோசனைக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
“வர்ணம் பூசி மக்களை ஏமாற்றுகிறார்கள்”; ஜனாதிபதியின் பேருந்து நிலையப் புனரமைப்பை விமர்சிக்கும் நாமல்!

"வர்ணம் பூசி மக்களை ஏமாற்றுகிறார்கள்"; ஜனாதிபதியின் பேருந்து நிலையப் புனரமைப்பை விமர்சிக்கும் நாமல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.