வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாழையில் அமைந்துள்ள இவ்வாலயத்தில், 2026 ஆம் ஆண்டின் சித்திரை புத்தாண்டை வரவேற்கும் வகையில் இன்று (13) திங்கட்கிழமை மருத்துநீர் காய்ச்சும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
ஆலய நிர்வாகத்தினரின் சிறப்பான ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வழமையான சடங்குகளுக்கு அமைவாக பல்வேறு மூலிகைகள் சேகரிக்கப்பட்டு, முறையான விதத்தில் மருத்துநீர் தயாரிக்கப்பட்டது.
மேலும், நிகழ்வுடன் இணைந்தவாறு காலை நேரத்தில் விசேட பூஜைகளும் நடத்தப்பட்டு, பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆன்மிக நன்மை பெற்றனர்.
சித்திரை புத்தாண்டு நாளை (14) கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்நிகழ்வு அந்த பண்டிகைக்கான ஆன்மிக முன்னோட்டமாக அமைந்தது.

















