Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
என்.டி.பி. வங்கியில் 13.2 பில்லியன் ரூபா மோசடி: விசாரணையில் இறங்குகிறது சர்வதேச பொலிஸ்

என்.டி.பி. வங்கியில் 13.2 பில்லியன் ரூபா மோசடி: விசாரணையில் இறங்குகிறது சர்வதேச பொலிஸ்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

என்.டி.பி. வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் மெய்நிகர் பணம்பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அது குறித்து விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் விசேட நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. 

பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள சர்வதேச பொலிஸ் தலைமையகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாரிய மோசடி தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் வங்கியின் தலைமையகத்திலுள்ள கொடுப்பனவு தீர்வைப் பிரிவின் உதவி முகாமையாளர் மற்றும் அவரது சகோதரரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடியினால் வங்கியின் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கு மீதிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று என்.டி.பி.  வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வங்கியின் வழமையான செயற்பாடுகள் மற்றும் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, என்.டி.பி. வங்கியின் மூலதன அளவு மற்றும் நிதி திரவத்தன்மை தொடர்பான விகிதங்கள், இலங்கை மத்திய வங்கியின் குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் அதிக மட்டத்திலேயே காணப்படுகின்றன. எனவே, வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை!

இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு