ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மொத்தமாக 36 விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 13ஆம் திகதி 19 விபத்துக்களும் 14ஆம் திகதி 17 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் இதே திகதிகளில் 35 தாக்குதல் தொடர்பான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவற்றுள் ஏப்ரல் 13ஆம் திகதி 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








