Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரணப்பொறியாக மாறும் நீர்நிலைகள்; கடந்த 6 நாட்களில் 26 பேர் உயிரிழப்பு!

மரணப்பொறியாக மாறும் நீர்நிலைகள்; கடந்த 6 நாட்களில் 26 பேர் உயிரிழப்பு!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.

கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினமும் (17) இரு வேறு இடங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

மிஹிந்தலை – மரதன்குளம் குளத்தில் நீராடச் சென்ற 55 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் 11 வயதுடைய மகனும், 12 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

எனினும், இரு சிறுவர்களும் எவ்வித பாதிப்புமின்றி பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தெஹியோவிட்ட – ஹிங்குரலகந்த பகுதியில் சீதாவக்க ஆற்றில் நீராடச் சென்ற 17 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தனது உறவினர்களுடன் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த இளைஞர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக பதிவாகும் இவ்வாறான மரணங்களை அடுத்து, நீர்நிலைகளில் நீராடும் போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

September 18, 2026
“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”
அரசியல்

“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”

September 18, 2026
இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!
செய்திகள்

இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
Next Post
ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு!

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு