யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.








