Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

5 months ago
in செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சிக்கு ஹன்ஸீர் ஆசாத் மௌலானா வழங்கிய கருத்துக்களை ஆதாரமாக கொண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தார்.

குறித்த விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை ரணிலுககு பரிந்துரைத்தது சுரேஸ் சலே என்ற அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை சுவிஸர்லாந்தில் இருந்து இயங்கும் இணையத்தளம் ஒன்று ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு சுரேஸ் சலே ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவரை தெரிவு செய்தது சலே.

அதாவது தனது குற்றங்களை விசாரிப்பதற்கு தானே ஒருவரை நியமிப்பது வேடிக்கையானதாகவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜயக்கி அல்விஸ் சலேவால் சிபாரிசு செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்.

கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அத்தியட்சகராக செயற்பட்ட பிரசன்ன அல்விஸின் சகோதரியே நீதிபதி ஜயக்கி அல்விஸ் ஆவார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வங்கிகளில் இருந்த பணத்தை சூறையாடுவதற்கு கோட்டாபய மற்றும் சுரேஷ் சலேவுக்கு உதவி செய்தவர் தான் பிரசன்ன அல்விஸ்.

இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியை சேர்ந்தவர்களாவர். மேலும் இந்த பிரசன்ன அல்விஸின் மனைவி பிரதி பொலிஸ் மா அதிபர், அதாவது சுரேஷ் சலேவுடன் அரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவர்.இவ்வாறு அனைவரும் நெருங்கிய நண்பர்களாவர்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவினால் 2024.06.12. நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு குறுகிய மூன்று கிழமைகளில் விசாரணைகள் நிறைவு செய்து சுரேஷ் சலே ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சம்பந்தப்படவில்லையென விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று சலேவுக்கு சார்பாக பேசுபவர்கள் இந்த ஜயக்கி அல்விஸின் விசாரணை அறிக்கையையே காரணம் காட்டி பேசுகின்றனர்.

ரணிலின் ஆட்சியில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மிக கடமையை கொண்டுள்ள ரணிலும் குற்றவாளிகளை காப்பாற்றவே முயற்சித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான காலத்தில் 2023 ஜுலை மாதம் ஓய்வு பெறும் வயதையடைந்த சுரேஷ் சலேவுக்கு ஒரு வருடம் பதவி நீடிப்பும் வழங்கியுள்ளார்.

இந்த பதவி நீடிப்பு இரு முறை வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை காப்பற்றவே முயற்சித்தமை ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
Next Post
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு