Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நோர்வேயில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட பேச்சு; கடற்றொழில் துறையை நவீனமயமாக்கத் திட்டம்!

நோர்வேயில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட பேச்சு; கடற்றொழில் துறையை நவீனமயமாக்கத் திட்டம்!

5 months ago
in செய்திகள்

நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும்கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நோர்வேயின் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (23) ஒஸ்லோ நகரில் விசேட கலந்துரையாடல்களை நடத்தினர். இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வது குறித்து அமைச்சர் இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

‘புளு ஜஸ்டிஸ்’ (Blue Justice) திட்டத்தின் தலைவர் குன்னார் ஸ்டோல்ஸ்விக் (Gunnar Stølsvik) உடனான சந்திப்பின் போது, இத்திட்டத்தின் கீழ் அங்கத்துவ நாடுகளுக்கு நோர்வே அரசாங்கம் வழங்கி வரும் உயர் மட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத் தரவு (AIS Data) முறைமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மீன்பிடிக் கலன்களைக் கண்காணிப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் இந்தத் தொழில்நுட்பத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இந்தத் தொழில்நுட்பத்தை மிகவும் வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சித் திட்டங்களை வழங்குவதற்கும் நோர்வே தரப்பு இதன்போது சம்மதம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, நிலையான உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய செயல்பாட்டு வலையமைப்பின் (Global Action Network) தலைவி அனிதா உத்தெய்ம் ஐவர்சன் (Anita Utheim Iversen) உடனான கலந்துரையாடலில், மீன் உற்பத்திகளின் ஊட்டச்சத்து பெறுமதி மற்றும் தரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த “உணவு ஊட்டச்சத்து மற்றும் கலவை தொடர்பான குழுவில்” (Food Nutrition and Composition Group) இணைந்துகொள்ளுமாறு இலங்கைக்கு இதன்போது உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் மூலம் நாரா (NARA) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சர்வதேச அறிவு மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட வாய்ப்பு கிட்டும்.

இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நோர்வே அரசாங்கத்திற்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சிற்கும் இடையிலான இந்த நெருக்கமான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஊடாக, நாட்டின் கடற்றொழில் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தவும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப இத்துறைசார் விடயங்களைப் புதுப்பிக்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

September 18, 2026
“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”
அரசியல்

“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”

September 18, 2026
இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!
செய்திகள்

இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
Next Post
12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.