Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் புதிய முன்மொழிவு

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் புதிய முன்மொழிவு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா – ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை இரத்போரை து செய்யப்பட்டது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த குழுவினர் இஸ்லாமாபாத்துக்கு சென்றிருந்த நிலையில், அமெரிக்க குழுவினர் பயணத்தை இரத்து செய்ததால், பாகிஸ்தான் மத்தியஸ்த குழுவிடம் புதிய முன்மொழிவை ஈரான் வழங்கியுள்ளது.

அந்த முன்மொழிவு தொடர்பான செய்தியை அமெரிக்காவின் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிடம் வழங்கிய புதிய முன்மொழிவில், மூன்று நிலைகளை ஈரான் குறிப்பிட்டுள்ளது. முதலில் போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டாவது கட்டமாக அமெரிக்க படைகள் பின்வாங்கப்பட்டு, ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்பட்டு, கடல்வழிப் போக்குவரத்து சீர்செய்யப்படும்.

இது இரண்டும் நடந்தால், இறுதியாக அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்க குழுவிடம் ஈரான் விவாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத உற்பத்தியை முழுமையாக நிறுத்துவோம் என்று ஈரான் அறிவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அமெரிக்கா மீண்டும் மீண்டும் தெரிவித்து வரும் சூழலில், ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்கா ஏற்குமா என்பது தெரியவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
Next Post
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு; மட்டக்களப்பில் முதல் கலந்துரையாடல்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு; மட்டக்களப்பில் முதல் கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு