Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
110 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல்; பிரதான மூளையாகச் செயல்பட்ட பிக்குவை தடுத்து வைக்க உத்தரவு!

110 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல்; பிரதான மூளையாகச் செயல்பட்ட பிக்குவை தடுத்து வைக்க உத்தரவு!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை மே 2-ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 22 பிக்குகளின் பயணப்பொதிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதன்போது, சுமார் 112 கிலோகிராம் எடையுள்ள “குஷ்” (Kush) மற்றும் “ஹேஷ்” (Hash) வகை போதைப்பொருட்கள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 22 பிக்குகளும் இன்று மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்தக் கடத்தல் கும்பலை வழிநடத்திய பிரதான நபரான கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்யாலங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த எனும் பிக்கு, விமான நிலையத்தில் போதைப்பொருள் சிக்கியதைக் கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

மிரிஸ்வத்தை பகுதியில் மறைந்திருந்த இவரைப் பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை மூலம் நேற்று (26) கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட அமிதானந்த பிக்கு, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இளம் பிக்குகளைத் தாய்லாந்து சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஒருங்கிணைக்க ஒரு ‘WhatsApp’ குழுவை இவரே இயக்கி வந்துள்ளார்.

இவரை எதிர்வரும் மே 2-ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாரிய நிதி முறைகேடு; நாமல் சாடல்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாரிய நிதி முறைகேடு; நாமல் சாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு