Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்; ஜெயிலர் மற்றும் பெண் பாதுகாவலர் அதிரடி கைது!

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்; ஜெயிலர் மற்றும் பெண் பாதுகாவலர் அதிரடி கைது!

5 months ago
in செய்திகள்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், நேற்று காலை சுமார் 11 மணியளவில் மகசின் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பணியில் இருந்த சிறைக் காவலர் அவர்களுடன் போராடியபோது மயங்கி விழுந்த ஒரு சந்தேக நபர் உயிரிழந்ததாகவும், மற்றொரு சந்தேக நபரும் சம்பந்தப்பட்ட அதிகாரியும் காயமடைந்ததாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர்களில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

38 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் உயிரிழந்த சந்தேக நபரின் உறவினர்கள், சிறை அதிகாரிகளின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்!

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு