Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திங்கட்கிழமை (27) இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில், இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா குழுவினர் இதில் கலந்துகொண்டனர். சம்மாந்துறை, கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் இந்த சுற்றிவளைப்பில் இணைந்திருந்தனர்.

இதன்போது சுமார் 42 உணவகங்கள் மற்றும் ‘டேஸ்ட்’ கடைகள் விரிவாகச் சோதனை செய்யப்பட்டன. குறிப்பாக உணவகங்களின் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் ஆகியவற்றின் தூய்மை நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்தச் சோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார சீர்கேடான முறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், சுகாதார விதிகளை மிகவும் மோசமான முறையில் மீறிய 10 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்துவது தொடர்பில் கடுமையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

பிராந்தியத்தில் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!
செய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

July 30, 2026
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!
செய்திகள்

முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!

July 30, 2026
பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!
செய்திகள்

பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

July 30, 2026
விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!
செய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

July 30, 2026
மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்
காணொளிகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்

July 30, 2026
காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!
செய்திகள்

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

July 30, 2026
Next Post
உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு