கிளிநொச்சியில் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் குறிப்பாக பேருந்துகள் பயணிகள் சேவைக்கு பாதுகாப்பான நிலையில் உள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தரமற்ற நிலையில் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பரந்தன் – முருகண்டி பாதையில் இயங்கும் பேருந்துகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
சோதனையில் கண்டறியப்பட்ட குறைகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மீண்டும் ஆய்வுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்துகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய கூடுதல் உதிரி பாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.








