இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், நேற்று (02) நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 410.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 470.00 ரூபாயாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 392.00 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபா 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை 265.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.








