நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அந்தப் பதிவில், ஜோசப் விஜய்யின் இந்த மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகள். மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்குவதிலும், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதிலும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வலிமையும் உறுதியும் கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் விவகாரங்களில் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே வலுவான மற்றும் நேர்மறையான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








