Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முள்ளியவளையில் துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவியின் சங்கிலி பறிப்பு; இருவர் தப்பி ஓட்டம்

முள்ளியவளையில் துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவியின் சங்கிலி பறிப்பு; இருவர் தப்பி ஓட்டம்

3 months ago
in செய்திகள்

முள்ளியவளை பகுதியில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலி அறுத்து பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளை நோக்கி துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை இலக்கத் தகடு இல்லாத, விலையுயர்ந்த NS ரக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

அதன் பின்னர், குறித்த மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதே பகுதிக்கு அண்மையில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.

இதனால், தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பில் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நிழற்குடைகள் மற்றும் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக திரியும் நபர்களை குறிவைத்து பொலிஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
Next Post
கிரைண்டரால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு

கிரைண்டரால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு