Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
4 மில்லியன் ரூபா பெறுமதியான டெலிகொம் கேபிள்கள் திருட்டு; ஹட்டனில் இருவர் அதிரடி கைது!

4 மில்லியன் ரூபா பெறுமதியான டெலிகொம் கேபிள்கள் திருட்டு; ஹட்டனில் இருவர் அதிரடி கைது!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டனில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை வெட்டி திருடி விற்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹட்டன் டெலிகொம் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நோர்வூட் , மாஸ்கெலியா மற்றும் காசல்ரீ பகுதிகளில் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொலைபேசிக் கம்பிகளே இவ்வாறு வெட்டி வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேக நபர்களைக் கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இரவில் வாகனங்களில் வந்து, தொலைபேசிக் கம்பிகளை வெட்டி எரித்து, அவற்றில் இருந்த செம்பை விற்கும் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி இணைப்புகளை வழங்குவதற்காக ஹட்டனிலிருந்து நோர்வூட், மாஸ்கெலியா மற்றும் காசல்ரீ பகுதிகளுக்கு வழங்கபட்டிருந்த பெரிய தொலைபேசி இணைப்பு கம்பிகளை ஒரு குழு வெட்டி அகற்றியதாக ஹட்டன் டெலிக்கொம் நிறுவனத்தின் அதிகாரிகள் ஹட்டன் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது நோர்வூட் பகுதியில் சந்தேக நபர்களின் வீட்டில் சோதனை நடத்திய போது சந்தேக நபர்களால் வெட்டி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 4 மில்லியன் மதிப்புள்ள பல தொலைபேசி கம்பிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு திருடி வெட்டி எடுத்த தொலைபேசி கேபிள்களை உருக்கிப் பெற்ற ஒரு கிலோ செம்பை அவர்கள் ரூ. 2,500-க்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு
செய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

September 26, 2026
மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

September 26, 2026
Next Post
மட்டு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு