Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் விடுதலை – கோட்டாபய தொடர்பு; அசாத் மௌலானா வாக்குமூலத்தால் பரபரப்பு!

பிள்ளையான் விடுதலை – கோட்டாபய தொடர்பு; அசாத் மௌலானா வாக்குமூலத்தால் பரபரப்பு!

4 weeks ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரைப் பிணையில் விடுவிப்பது குறித்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்று, அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையானைச் சந்தித்துப் பேசியுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) வெளிப்படுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், வெறும் ஒரு வார காலத்திற்குள் பிள்ளையானுக்குப் பிணை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செய்து தருவதாக, மட்டக்களப்புச் சிறையில் வைத்து அவர்கள் பிள்ளையானிடம் உறுதியளித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

பிள்ளையானின் முன்னாள் செயலாளரும், தற்போதைய முக்கிய சாட்சியுமான அசாத் மௌலானா வழங்கிய அதிரடி வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, இந்த அதிர்ச்சித் தகவல்கள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பிரான்ஸ் நாட்டில் அரசியல் புகலிடம் கோரி வசித்து வரும் அசாத் மௌலானாவிடம், அங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் சென்ற விசேட புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் குழுவினர் விரிவான வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு பிரான்சில் வைத்துப் பதிவு செய்யப்பட்ட அசாத் மௌலானாவின் உத்தியோகபூர்வ வாக்குமூலம் மற்றும் அது தொடர்பான மிக முக்கியமான புலனாய்வு ஆவணங்கள் அனைத்தும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று கோட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்
செய்திகள்

என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

June 14, 2026
ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா
அரசியல்

ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா

June 14, 2026
மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி
செய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி

June 14, 2026
மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை
காணொளிகள்

மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை

June 14, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

June 14, 2026
தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசியல்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

June 14, 2026
Next Post
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 322 பேர் கைது!

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 322 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு