Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயின் கச்சதீவு கருத்து இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்; இந்துரகரே தேரர் தேரர் கடும் எச்சரிக்கை!

விஜயின் கச்சதீவு கருத்து இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்; இந்துரகரே தேரர் தேரர் கடும் எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்) கச்சதீவு விவகாரம் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து, இலங்கையின் முப்படை இராணுவத்தினர் தமது இன் உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த எமது நாட்டின் தேசிய இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளதாகப் பேராசிரியர் இந்துரகரே தேரர் தெரிவித்துள்ளார்.

மகாபிரிவெனாவில் நடைபெற்ற மாபெரும் ‘போர் வீரர்களை நினைவுகூரும்’ உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழக முதலமைச்சர் கச்சதீவை மீண்டும் இந்தியாவின் வசம் மீட்பேன் என்று முழக்கமிட்ட போது, யாழ்ப்பாணத்தில் உள்ள சில சுயநல அரசியல் குழுக்கள் அதற்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிக் கோஷமிட்டுக் கொண்டாடினர்.

அதுமட்டுமன்றி, எமது நாடாளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவு அரசியல்வாதிகளும் இதற்குத் பகிரங்கமாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எமது நாட்டின் சில பொறுப்பற்ற தலைவர்கள் கச்சதீவுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விட்டு, ‘அங்கு பாறைகளைத் தவிரப் பெற்றுக்கொள்வதற்கு வேறு எதுவும் இல்லை’ எனக் மிகச் சாதாரணமாகக் கூறிவிட்டு வந்துள்ளனர்.

அவர்களது தற்போதைய போக்கைப் பார்த்தால், கச்சதீவை அப்படியே தூக்கிக் கொடுத்தாலும் பரவாயில்லை என்ற ரீதியிலேயே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையப் போவது போல் தோன்றுகிறது. இன்று நாடாளுமன்றப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு விஜய்யின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வட மாகாணத்தையுமே தமிழகத்துடன் இணைத்துக் கொள்ளுமாறு மறைமுகமாகக் கோரி வருகின்றனர்.

சுயலாப எண்ணம் கொண்ட இந்த ஆபத்தான அரசியல் கொள்கையும், சர்வதேச நகர்வுகளும், எதிர்காலத்தில் எமது நாட்டின் இராணுவத்தினர் இரத்தம் சிந்திப் பாதுகாத்த நாட்டின் சுயாதீன இறையாண்மைக்கு விடுக்கப்படும் ஆகப்பெரும் அச்சுறுத்தலாகும். இது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் தேசபக்தி சார்ந்த ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக மிக விரைவில் மாறப்போவது உறுதி” எனப் பேராசிரியர் இந்துராகாரே தேரர் தனது உரையில் மிக ஆணித்தரமாக எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!
செய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

July 30, 2026
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!
செய்திகள்

முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!

July 30, 2026
பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!
செய்திகள்

பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

July 30, 2026
விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!
செய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

July 30, 2026
மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்
காணொளிகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்

July 30, 2026
காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!
செய்திகள்

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

July 30, 2026
Next Post
ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு