Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்பி பயன்படுத்தாது கட்டப்படும் கல்முனை கடற்கரை நடைபாதை சர்ச்சை; RDA தரப்பில் விளக்கம்

கம்பி பயன்படுத்தாது கட்டப்படும் கல்முனை கடற்கரை நடைபாதை சர்ச்சை; RDA தரப்பில் விளக்கம்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பகுதியில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட வீதிக்காக முன்னெடுக்கப்பட்ட நடைபாதை புனரமைப்புத் திட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை தகவலறியும் உரிமைகள் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு விளக்கமொன்றை வழங்கியுள்ளது.

குறித்த திட்டத்தில் இரும்புக் கம்பிகள் (Reinforcement) பயன்படுத்தப்படவில்லை என்றும், அதனால் ஒப்பந்தக்காரர்கள் முறைகேடாக செயல்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனையொட்டியதாக தகவலறியும் உரிமைகள் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மிர், “வீதிநடைபாதைகளுக்கு பொதுவாக இரும்புக் கம்பிகள் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபாதைகள் அவற்றின் கீழுள்ள உறுதியான தரையினால் முழுமையாகத் தாங்கப்படுவதால், அவை பெரும்பாலும் அழுத்த விசையை (Compressive Load) மட்டுமே எதிர்கொள்கின்றன என்றும், இழுவிசைகளை (Tensile Stress) தாங்க வேண்டிய கட்டிடங்கள், தூண்கள் அல்லது மேம்பாலங்கள் போன்ற அமைப்புகளுக்கே இரும்புக் கம்பிகள் அவசியமாகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதைத் திட்டத்திற்கான அசல் திட்ட வரைபடத்திலேயே இரும்புக் கம்பி பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்ட நிதியின் கீழ் சுமார் 34 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் 2024 ஆம் ஆண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப புரிதல் இன்மையால் ஏற்பட்டவை என்பது தெளிவாகியுள்ளது எனவும், ஒலுவில் துறைமுக முறைகேடான நிர்மாணிப்பால் ஏற்பட்ட கரையழிப்பு காரணமாக கல்முனை பாதிக்கபப்ட்டுள்ளதாக கல்முனை முன்னாள் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.டி. ஜமால் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் கருத்து வெளியிடுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
Next Post
சீரற்ற வானிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் மூடல்!

சீரற்ற வானிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் மூடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு