Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கு; 17 வருடங்களின் பின் ஏர்பஸ், ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு 720 கோடி ரூபாய் அபராதம்!

ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கு; 17 வருடங்களின் பின் ஏர்பஸ், ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு 720 கோடி ரூபாய் அபராதம்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 2009 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) இருந்து பாரிஸ் நோக்கிப் பயணித்த ‘ஏர்பஸ் ஏ330’ (Airbus A330) விமானம் விபத்துக்குள்ளான வழக்கில், சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 228 பேரின் குடும்பங்களுக்கும் மொத்தமாக 720 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை இழப்பீடாக வழங்குமாறு ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் (Sensors) பனியால் மூடப்பட்டுப் பழுதடைந்ததே விபத்துக்குக் காரணம் என இரு நிறுவனங்களும் வாதிட்டன. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2023 ஆம் ஆண்டு இரு நிறுவனங்களையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துச் சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Appeals Court) மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தத் துயரமான மரணங்களுக்கு ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களின் அலட்சியமும் கவனக்குறைவுமே காரணம் எனத் தீர்ப்பளித்தனர். தொழில்நுட்பக் கோளாறுகளை முன்கூட்டியே சரிசெய்யத் தவறியமை மற்றும் அவசர காலங்களில் செயல்படுவதற்கான முறையான பயிற்சி விமானிகளுக்கு வழங்கப்படாமை ஆகியவையே விபத்துக்கு முதன்மைக் காரணங்கள் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2.51 கோடி ரூபாய் வீதம், மொத்தமாக 720 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, பிரான்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் (Highest Court) தாங்கள் முறையீடு செய்யவுள்ளதாக இரு விமான நிறுவனங்களும் தற்போது அறிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
வெலிமடையில் தோட்டத் தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல்; “அடித்தால் திரும்ப அடி” என வடிவேல் சுரேஷ் கடும் எச்சரிக்கை!

வெலிமடையில் தோட்டத் தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல்; “அடித்தால் திரும்ப அடி” என வடிவேல் சுரேஷ் கடும் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு