பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், நேற்று (29) தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வான நேற்று, பஞ்சரத பவனி விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்றது. ஆசியாவின் மிகவும் பழமையானதும் மிகப்பெரியதுமான சோமாஸ்கந்த மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்ததையடுத்து, பஞ்சரதத் தேரில் உற்சவ மூர்த்திகள் ஆரோஹணிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.
குறித்த தேர்த்திருவிழா வீதி உலாவில் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.













