Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சென்னையில் இலங்கை பெண் கொலை; காயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

சென்னையில் இலங்கை பெண் கொலை; காயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சென்னையின் கோயம்பேட்டில் காரால் மோதப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தியிருந்தார். அந்த தோழியைச் சந்திப்பதற்காக சென்னை சென்றிருந்த அவர், இரவு நேரத்தில் கோயம்பேட்டில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, இரு தரப்பினரையும் விடுதியின் பாதுகாப்பு பணியாளர்கள் வெளியேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்த யான்சி மற்றும் அவருடன் இருந்த 17 வயது சிறுமி மீது, தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவினர் காரை வேகமாக செலுத்தி மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேவேளை, பலத்த காயமடைந்த சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சுயநினைவின்றி இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவரது நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்துக்கு பயன்படுத்தப்பட்ட காரில் ஒரு அரசியல் கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற கேளிக்கை விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
ஒரே மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணைய நிதி மோசடிகள் பதிவு!

ஒரே மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணைய நிதி மோசடிகள் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.