Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணைய நிதி மோசடிகள் பதிவு!

ஒரே மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணைய நிதி மோசடிகள் பதிவு!

3 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360-க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அதன் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல, இணையம் ஊடாக நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

கடந்த பண்டிகைக் காலங்களில் பதிவான மோசடிகளைப் போலவே, வெசாக் மற்றும் பொசோன் பண்டிகைகளை முன்னிட்டு பிரபல வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட போலி விளம்பரங்கள் மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கடன் அட்டை விவரங்கள் திரட்டப்பட்ட சம்பவங்கள் கடந்த மாதம் முழுவதும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, இணையத்தில் ஏதேனும் ஒரு கொடுப்பனவை மேற்கொள்ளும் முன், அது உண்மையான மற்றும் பாதுகாப்பான இணையதளமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், குறுஞ்செய்திகள் அல்லது அறிமுகமற்ற மூலங்களின் மூலம் அனுப்பப்படும் இணையதள இணைப்புகளில் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் அல்லது கடன் அட்டை தகவல்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதிவிடக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என SLCERT வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு