Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கந்தளாயில் பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை!

கந்தளாயில் பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கந்தளாய் குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் பாரிய அளவிலான சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் பொலிஸார் சுற்றிவளைத்து கண்டுபிடித்துள்ளனர்.

கந்தளாய் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவரது மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த விசேட நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது, காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பெரிய பரல்களும் ஒரு சிறிய பரலும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் கள்ளச்சாராய உற்பத்திக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 இலட்சத்து 90 ஆயிரம் மில்லிலிட்டர் கோடா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கோடா பின்னர் சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொலிஸாரின் வருகையை அறிந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
Next Post
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சங்கீதன் கைது; அருட்தந்தை சத்திவேல் கண்டனம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சங்கீதன் கைது; அருட்தந்தை சத்திவேல் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு