Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் கவலைகளுக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ விளக்கம் அளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வு அல்லது ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு பொருளாதார நெருக்கடியின் அறிகுறியாகக் கருதப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையால் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களின் பிரதிபலிப்பாகவே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையால் இலங்கை பொருளாதாரத்தில் சில தற்காலிக அதிர்வுகள் ஏற்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்தவும் சமாளிக்கவும் தேவையான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் காணப்படும் ஊக வணிக நடவடிக்கைகள் மற்றும் தேவையற்ற அச்சம் காரணமாக டொலர் மாற்று விகிதத்தில் குறுகியகால மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவித்த அவர், அண்மையில் 350 ரூபாயைத் தாண்டியிருந்த டொலரின் பெறுமதி அரசின் தலையீடுகளால் 330 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டதாகவும் கூறினார்.

கடந்த சில நாட்களில் மீண்டும் சிறியளவிலான உயர்வு பதிவாகியிருந்தாலும், நிலைமை விரைவில் சீரடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அல்லது வெளிநாட்டு நிதி நெருக்கடியைக் குறிக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், டொலர் மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல் அரசின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு