ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் மீது உக்ரைன் இராணுவம் பாரியளவிலான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள Volodymyr Zelenskyy, ரஷ்யா தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே ரஷ்யாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடற்படைத் தளங்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேரடி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த Vladimir Putin வெளியிட்ட கருத்துக்கு பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, Alexander Drozdenko வெளியிட்ட தகவலின்படி, லெனின்கிராட் பிராந்திய வான்வெளியில் 140-க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள் ரஷ்ய பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ரஷ்யா–உக்ரைன் போரின் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்துவரும் நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருவதாகக் கருதப்படுகிறது.








