Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் நேற்று (08) கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாமாங்கம் பிரதேசத்தில் கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் ஒரு இடத்தில் சேவை வழங்கும் கட்டிடத்தினை உடைத்து கட்டப்போவதாக தெரிவித்து அங்கு வழங்கப்பட்ட சேவைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கட்டிடம் 1998ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்காக கட்டப்பட்டு பின்னர் தொழில் பயிற்சி அதிகாரசபையினால் தொழில் பயிர்ச்சி வழங்கும் நிலையமாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் அதுவும் கைவிடப்பட்டிருந்த நிலையில் மாமாங்கம் பிரதேசத்தின் கிராம சேவையாளர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒரே இடத்தில் சேவையினை வழங்கும் நிலையமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நிலையத்தினை தொழில் பயிற்சி நிலையமாக அமைக்கும் வகையில் புனரமைப்பு செய்யவுள்ளதாக கூறிய நிலையில் அங்கு வழங்கப்பட்டுவந்து சேவைகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த நிலையத்துடன் இணைந்ததாக மேலும் ஒரு கட்டிடம் நீண்டகாலமாக உடைந்த நிலையில் காணப்படுவதனால் அதனை புனரமைத்து தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்குமாறும் இந்த கட்டிடத்தில் அதன் சேவைகளை பெறுவதற்கான வழியை ஏற்படுத்தி தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான வசதி இங்கே மட்டும் உள்ளதாகவும் வேறு இடத்தில் மாற்றும்போது சேவைகள் பிரிந்துசெல்வதனால் வயோதிபர்கள் உட்பட பலர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபுவினை தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த கட்டிடத்தினை புனரமைப்பு செய்து மீண்டும் கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்கே வழங்கப்படவுள்ளதாகவும் வேறு தேவைகளுக்கு குறித்த கட்டிடம் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.