Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களை கைவிடும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களை அரசாங்கம் பொறுப்பேற்று பராமரிப்பதற்கான நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரின் சொத்துக்களை அனுபவித்துக்கொண்டு அவர்களை கைவிடுவது மிகவும் கொடூரமான செயலாகும். அதேவேளை, அது பெற்றோரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகவும் அமைவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோரின் சொத்துக்கள் தொடர்பாக புதிய சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் தவிக்கும் அல்லது பல்வேறு தொந்தரவுகளை எதிர்நோக்கும் பெற்றோர்கள் உடனடியாக தகவல்களை வழங்கக்கூடிய வகையில் விசேட முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.