Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

3 months ago
in செய்திகள்

வங்கிக் கடன் பெறுவதற்காக மகனின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த குடியிருப்புச் சொத்தின் உண்மையான உரிமையாளர் தாயே என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக தாய் முன்னெடுத்திருந்த சுமார் 30 ஆண்டுகால சட்டப் போராட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது.

மிரிஹான பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை, 1987ஆம் ஆண்டு வங்கிக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே தனது மகனின் பெயருக்கு மாற்றியதாக தாய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடனை அடைத்த பின்னர் வீட்டை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே சொத்து மாற்றப்பட்டதாகவும், வீட்டின் முழுமையான உரிமையை மகனுக்கு வழங்கும் நோக்கம் தனக்கில்லை என்றும் அவர் வாதிட்டார்.

எனினும், குறித்த வீட்டை 125,000 ரூபாவிற்கு தாம் வாங்கியதாக மகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கல்கிஸ்சை மாவட்ட நீதிமன்றமும் பின்னர் மேல் நீதிமன்றமும் தாய்க்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தன.

அதனை எதிர்த்து மகன் தரப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஏகமனதாக உறுதிப்படுத்தி மகனின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் 83ஆவது பிரிவின் கீழ், சொத்து மாற்றப்பட்ட சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அதன் உண்மையான உரிமையாளரை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும் என நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.

தாய் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாங்கிய ஒரேயொரு குடியிருப்பு இதுவாகும் என்பதையும், பெற்ற வங்கிக் கடன் வீட்டை விரிவுபடுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டிருந்ததையும் கருத்தில் கொண்டு, குறித்த வீட்டின் உண்மையான உரிமையாளர் தாயே என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
Next Post
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு