நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதொச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் அறிவிப்பின்படி, புதிய விலைத் திருத்தம் நாளை (10) முதல் நடைமுறைக்கு வரும்.
விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்களில் பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி மற்றும் பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்குகின்றன.
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் சூழ்நிலையால் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களின் பின்னணியில், பொதுமக்களின் வாழ்வுச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.








