களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், களுத்துறை, வாதுவ, மத்துகம, பேருவளை, அளுத்கமை மற்றும் பயாகல ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.
கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதன் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.








