Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்; ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பதிலடி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்; ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பதிலடி

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது.

சற்று நேரத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள், ஓமான் கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நடவடிக்கைகள் தற்காப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை எனவும் விளக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது நடைபெற்று வரும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தாது என அமெரிக்கா நம்புவதாகவும் கூறியுள்ளார்.

முதற்கட்டத் தாக்குதல்களில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடுத்த கட்டத் தாக்குதல்களும் இடம்பெறக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஈரானின் ஷாஹெட் (Shahed) ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் உள்ளானதாக கூறப்படுகிறது. எனினும், அது திட்டமிட்ட தாக்குதலா அல்லது தவறுதலாக நிகழ்ந்ததா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

July 29, 2026
பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!
செய்திகள்

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!

July 29, 2026
ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
Next Post
முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை; 8 காவலாளிகள் கைது!

முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை; 8 காவலாளிகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு