Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரை கேலி செய்து டிக்டொக் காணொளி; சம்மாந்துறையில் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

பொலிஸாரை கேலி செய்து டிக்டொக் காணொளி; சம்மாந்துறையில் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு
சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த
வெள்ளிக்கிழமை (5) முதல் திங்கட்கிழமை (8) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட
சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார்
சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த நடவடிக்கையின் போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை, சாரதி
அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட
குற்றங்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப பட்டு அவற்றை செலுத்தியவர்களும் சட்ட
நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தவிர டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து
காணொளி பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.

மேலும் இச்சோதனை நடவடிக்கையின்போது சாரதி அனுமதிப்பத்திரம், வருமான வரிச் சான்றிதழ்
காப்பீட்டுச் சான்றிதழ் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக
வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இவர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் 38, 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. ஏனைய
சந்தேக நபர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சம்மாந்துறை
பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்
மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு