Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அபிவிருத்தி பயிற்சி நிலைய பிரதேச மட்டக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு நேற்று (10) கோரகல்லிமடு கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கோறளைப்பற்று தெற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் க. ரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. கோகுலராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் சிரேஷ்ட தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி என். ரவிச்சந்திரன் கலந்துகொண்டதுடன், மாவட்டத்தின் பல கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது, அதிதிகளால் கண்காட்சி மண்டபம் திறந்து வைக்கப்பட்டதுடன், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டு கொள்வனவு செய்தனர்.

இதேவேளை, கோரகல்லிமடு பிரதான வீதியில் அமைந்துள்ள “வாகை தையலகம்” வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மேலும், முருங்கன் தீவு மற்றும் திகிலிவெட்டை மக்களின் நீண்டகால நீர்வழிப் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு PSDG வேலைத்திட்டத்தின் கீழ் படகு கொள்வனவிற்காக தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், பல மாதர் சங்கங்களுக்கு சுயதொழில் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்றிய மாதர் சங்க பிரதிநிதிகள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வில் பங்கேற்ற அதிதிகளும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு