Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

UL-606 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்டது. ஏர்பஸ் A330 வகையைச் சேர்ந்த விமானத்தில் 217 பயணிகளும் 16 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய விமானி, பயணத்தைத் தொடராமல் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பினார்.

அதன்படி, அதிகாலை 1.40 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகளை சிட்னிக்கு அனுப்புவதற்காக, ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனம் மற்றொரு ஏர்பஸ் A330 விமானத்தை ஏற்பாடு செய்தது. அந்த மாற்று விமானம் இன்று காலை 6.06 மணியளவில் சிட்னி நோக்கிப் புறப்பட்டது.

மின்னல் தாக்கத்துக்குள்ளான விமானம் தற்போது மேலதிக தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் தேவையான பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் பராமரிப்பு ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு