Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா​வுடன் செய்து கொள்​ளும் அமைதி வரைவு ஒப்​பந்​தத்​தில், அணு ஆயுதங்​களை தயாரிக்​கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்​ள​தாக ஈரான் அதி​காரிகள் தெரி​வித்​துள்​ளனர். அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் திகதி போர் தொடங்​கியது. அதன்​பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்​ரல் 8-ம் திகதி போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு நீட்​டிக்​கப்​பட்டு வரு​கிறது. இருதரப்பு இடையே அமைதி மற்​றும் போர் நிறுத்​த ஒப்​பந்​தம் ஏற்​படு​வதற்​கான முயற்​சி​யில் பாகிஸ்​தான் உட்பட பல நாடு​கள் களம் இறங்​கின.

தற்​போது இருதரப்பு இடையே அமைதி வரைவு ஒப்​பந்​தம் விரை​வில் கையெழுத்​தாக​ உள்​ள​தாக அமெரிக்கா மற்​றும் ஈரான் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்து ஈரான் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறி​யிருப்​ப​தாவது,

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி வரைவு ஒப்​பந்​தம் கையெழுத்​தாக​ உள்​ளது. இறுதி ஒப்​பந்​தம் குறித்து இரு தரப்​பும் 60 நாட்​களுக்​குள் விவா​தித்து முடி​வெடுக்​கும். அணு ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யவோ, வாங்கவோ மாட்​டோம் என்று ஈரான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

இறுதி ஒப்​பந்​தம் எட்​டப்​படும் வரை ஈரான் தனது தற்​போதைய அணுசக்தி திட்​டத்தை அப்​படியே பராமரிக்கும். இதில் யுரேனி​யத்தை செறிவூட்​டா​மல் இருப்​பதும், அணுசக்தி நிலை​யங்​களை விரிவுபடுத்​துவதை தவிர்ப்​பதும் அடங்​கும். ஈரானில் இருக்​கும் செறிவூட்​டப்​பட்ட யுரேனிய இருப்பை நீர்த்​துப்​போகச் செய்​வதை அமெரிக்கா ஏற்​கும். இதற்​கான வழி​முறை​கள் குறித்து இரு தரப்​பும் 60 நாட்​களுக்​குள் விவா​திக்​கும்.

ஈரான் மீதான தடைகள் நீக்​கம் மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் திறப்​பது ஆகியவை இந்த வரைவு ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. அனைத்து வணி​கக் கப்​பல்​களுக்​கும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் உடனடி​யாக திறக்​கும். ஈரானிய துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகையை அமெரிக்கா வாபஸ் பெறும்.

இரு தரப்​பும் இறுதி ஒப்​பந்​தத்தை எட்​டும் வரை அமெரிக்கா ஈரான் மீது புதிய தடைகளை விதிக்​காது. வாஷிங்டன் ஒரு குறிப்​பிட்ட காலத்​துக்கு எண்​ணெய் மீதான தடைகளை தளர்த்​தும். இதன்மூலம் ஈரான் எண்ணெய்யை விற்​க​வும், அதன் மூலம் கிடைக்​கும் வரு​வாயை பயன்​படுத்​த​வும் முடி​யும்.

25 பில்​லியன் டாலர் மதிப்​புள்ள ஈரானிய சொத்​து​களை விடுவிக்க அமெரிக்கா வழி​வகை செய்​யும். இந்த ஒப்பந்​தம் இன்றோ அல்​லது ஒரு சில நாட்​களி​லோ கையெழுத்​தாகலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த அமைதி ஒப்​பந்​தம் 14-ம் திகதி (நேற்று) கையெழுத்​தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறி​வித்​திருந்​தார். ஆனால், இந்த கெடுவை நிராகரித்​துள்ள ஈரானின் வெளி​யுறவு அமைச்​சகம், வரும் நாட்களில் இந்​த வரைவு ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகலாம்​ என்​று தெரிவித்​துள்​ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.