முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தமது கட்சியின் உறுப்பினர் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஷு மாரசிங்க எந்த வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆஷு மாரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் அவரின் ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.









