மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை–தும்பாலை பகுதியில் உள்ள வயல் ஒன்றில் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானை, வயலைச் சுற்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த வெல்லாவெளி பொலிஸார், அந்த வயலின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
மேலும், யானையின் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த யானையின் உடலை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.












