Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கத்தார் எரிவாயு விநியோக தள வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

கத்தார் எரிவாயு விநியோக தள வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கத்தாரின் முக்கிய எல்.என்.ஜி (LNG) உற்பத்தி மையமான ராஸ் லாஃபான் (Ras Laffan) தொழிற்துறை நகரில் உள்ள பர்சான் (Barzan) எரிவாயு விநியோக தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு, இந்த எரிவாயு தளத்தில் உற்பத்தியை மறுதொடக்கம் செய்யும் பணிகளின் போது எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்தும் அதைத்தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. உடனடியாக விரைந்த அவசரக்கால மீட்புக்குழுவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதுடன், 66 பேர் காயமடைந்துள்ளதாக கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் கத்தார், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தான்சானியா, கென்யா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர். எனினும், யாருடைய காயமும் உயிருக்கு ஆபத்தானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விபத்தினால் கத்தாரின் எல்.என்.ஜி ஏற்றுமதியிலோ அல்லது ராஸ் லாஃபான் துறைமுக செயல்பாடுகளிலோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பணிகள் வழக்கம் போல் நடப்பதாகவும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
செய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

August 7, 2026
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

August 7, 2026
பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

August 7, 2026
ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

August 7, 2026
Next Post
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைக்கு தனியார் பேருந்து சங்கம் எதிர்ப்பு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைக்கு தனியார் பேருந்து சங்கம் எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு